2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 359138 பேர் வாக்களிக்க தகுதி

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஏதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 19 உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கென 3 இலட்சத்து 59 ஆயிரத்து 138 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா தெரிவித்தார்.    
    
இதன்படி அக்கரைப்பற்று மாநகர சபை 20971 பேரும், அம்பாறை நகர சபை - 13523 பேரும், சம்மாந்துறை பிரதேச சபை 37469 பேரும், நிந்தவூர் பிரதேச சபை 19124 பேரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை 25510 பேரும், காரைதீவு பிரதேச சபை 11566 பேரும், பொத்துவில் பிரதேச சபை 21398 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

திருக்கோவில் பிரதேச சபை 17600 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச சபை 15358 பேரும், இறக்காமம் பிரதேச சபை 8185 பேரும், நாவிதன்வெளி பிரதேச சபை 12799 பேரும், தெஹியத்துக் கண்டிய பிரதேச சபை 40099 பேரும், பதியத்தலாவ பிரதேச சபை 11686 பேரும், மாகஓயா பிரதேச சபை 12607 பேரும், உஹன பிரதேச சபை 40694 பேரும், நாமல்ஓயா பிரதேச சபை 16715 பேரும், தமன பிரதேச சபை 23899 பேரும், லகுகல பிரதேச சபை 5861 பேரும், அக்கரைப்பற்று பிரதேச சபை 4074 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை கல்முனை மாநகர சபைக்கான கலைக்கப்படாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--