Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதான வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் பலத்த காயங்களுக்குள்ளானார்கள்.
இன்று காலை 7.30 மணியளவில் கல்முனையில் இருந்து காரைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் கவச வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் கல்முனை நோக்கி அலுவலகங்களுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் நேருக்கு நேர் மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் உட்பட அனைவரும் வீதி ஓரங்களிலும் நடு வீதியிலும் தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக விசேட அதிரடிப்படை வீரர்களும் பொதுமக்களும் இணைந்து காயப்பட்டவர்களை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பியதுடன் வீதியில் ஒன்றன் மேல் ஒன்றாக குவிந்து கிடந்த மோட்டார் சைக்கிள்களையும் அப்புறப்படுத்தினார்கள்.
49 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
4 hours ago