2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

400 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேசத்தில் மல்கம்பிட்டி - அல்லிமுல்லை வீதியில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற  பொலிஸ் குழுவினர், கல்முனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நபரிடமிருந்து வைத்து 400 கிறாம் நிறையுள்ள கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், இக்கஞ்சாப் பொதி சுமார் இரண்டு இலட்சம் பெறுமதி என சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--