2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

கடைகள் உடைக்கப்பட்டு ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கொள்ளை

Kogilavani   / 2011 நவம்பர் 17 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை நகரப்பகுதியில் இரண்டு மதுபானசாலைகள் உட்பட மூன்று கடைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு; உடைக்கப்பட்டு ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை நகர பொலிஸார் தெரிவித்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பிரதான வீதியில் உள்ள மதுபானசாலைகள் இரண்டும் பலசரக்கு கடை ஒன்றையும்   உரிமையாளர்கள் வழமை போல் பூட்டிவிட்டு சென்றதாகவும் இன்று காலை வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு மதுபானசாலையொன்றில் வைக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் பலசரக்கு கடையில் இருந்த 5 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளi மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • hassanqs Thursday, 17 November 2011 11:29 PM

    NADAKKATDUM

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .