Super User / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களினது அடிப்படை வசதிகளை பூர்திசெய்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ 7 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளார்.
விவசாயம், நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பிரச்சிசனைகளை தீர்த்து பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கைகளை சீர்செய்யும் வகையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.தயாரட்ன, ஏ.எல்எம்.அதாவுல்லா சரத் வீரசேகர, எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸால் காசிம் மற்றும் எம்.பியசேன ஆகியோருக்கே இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலிருந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி யோசனைகள் முன்னுரிமை அடிப்படையில் பரீசீலிக்கப்பட்டு 58 வேலைத்திட்டங்களுக்கு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டங்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவு செய்யப்பட்டு பொது மக்களின் பாவனைக்கென கையளிக்கப்படவேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா தெரிவித்தார்.
14 minute ago
27 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
36 minute ago
43 minute ago