Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை போக்குவரத்து பொலிஸாரினால் அதேயிடத்தில் தண்டம் விதித்ததன் மூலம் 45 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநயக்கா தெரிவித்தார்.
போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைகள் காரணமாக தற்போது குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளதுடன், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் வாகனச்சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதால் வீதி விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களுக்கு முன்னர் இப்பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களில்; அதிகமானோர் தலைக்கவசம் அணிந்திராத நிலையில் காணப்பட்டார்கள். ஆனால் இந்நிலை தற்போது மாற்றமடைந்து 95 வீதமானோர்கள் தலைக்கவசம் அணிந்து செல்லும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுவருவதனால் விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களும் தடுக்கப்படுவதுடன், போக்குவரத்து நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது. இதற்கு பொதுமக்கள் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
meenavan Wednesday, 12 October 2011 12:47 AM
தண்டப்பணம், பிரதேச சபைக்கு சேருமா? மாகாண அரசு அல்லது மத்திய அரசுக்கு சேருமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025