2021 மார்ச் 03, புதன்கிழமை

அனர்த்த முகாமைத்துவ செயலணி உருவாக்கம்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

றாசிக் நபாயிஸ்

தற்போதைய பருவ மழையைக் கருத்தில்கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் அனர்த்த பாதுகாப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனர்த்த முகாமைத்துவ ஒழுங்கமைப்புக் கூட்டம், நேற்று (25) நடைபெற்றது.

கல்முனை மாநகர மேயர் செயலகத்தில், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 35 நிறுவனங்களை உள்ளடக்கிய  அனர்த்த முகாமைத்துவ செயலணி உருவாக்கப்பட்டது.

இதன்போது, வெள்ளத் தடுப்பு, குறைப்பு, பாதுகாப்பான இடங்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல், சுகாதார முன்னெடுப்புகள், உலர் உணவு விநியோகம், அவசர கால நிலைமையின் போது எவ்வாறு செயற்படுவது தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .