Princiya Dixci / 2021 மார்ச் 04 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை இடமாற்றத்துக்கும் தமக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அதிபர்களின் இடமாற்றத்தில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் ஊடகங்களில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், மாகாண கல்விப்பணிப்பாளர், இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற சபைத் தலைவரை, அப்பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கோரியிருந்தோம். அவர் இப்பதவிக்கு தகுதியற்ற ஒருவர் என கடுமையான எதிர்ப்பை தெரிவித்தபோதும் மாகாண கல்வி அமைச்சின் முன்னைய செயலாளர் அதனை கவனத்தில் கொள்ளாமல், பொருத்தமற்ற ஒருவரை இடமாற்ற சபைத் தலைவராக நியமித்தமையாலேயே இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது.
“கல்முனை கல்வி வலய அதிபர்கள் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு, மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஆனால், அவ்வலயங்களில் இருந்து எந்தவொரு அதிபரும் கல்முனை வலயத்துக்கு இடமாற்றப்படவில்லை.
“எனவே, பாதிக்கப்பட்டவர்கள், தமது மேன்முறையீடுகளை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அனுப்புமாறு கேட்டுக் கொள்வதாக மாகாணக் கல்வி பணிப்பாளர் நிசாம் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago