2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

’கொரோனா அற்ற இலங்கை மலரும்’

நடராஜன் ஹரன்   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா அற்ற தேசமாக, இலங்கை வெகுவிரைவில் மலரும் எனும் பூரண நம்பிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின், கொரோனா வைரஸ் தடுப்ப நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதாக, அம்பாறை மாவட்டத்தை தளமாக கொண்டு இயங்குகின்ற அனைத்து கட்சி அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் நாட்டை காக்கும் இளைஞர் அணியின் பிரதி தலைவருமான முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (25) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு, தாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எனினும், றுகிய சுய இலாப அரசியல்வாதிகள் முட்டைக்குள் மயிர் பிடுங்குவது போல, இவ்வாறான நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய கூடும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், இந்நாட்டு மக்கள் அனைவரது கதாநாயகனாக, ஜனாதிபதி ராஜபக்‌ஷ உயர்ந்து நிற்கின்றார் என்பதே உண்மை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .