2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பாரபட்சமின்றி அபிவிருத்தி மேற்கொள்வேன் : ஹரீஸ்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கைவசம் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி எமது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் சமமான அபிவிருத்தி வேலைகளை எவ்வித பாரபட்சமின்றி மேற்கொள்வேன் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேர்தலில் எனது வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச கட்சி போராளிகளுக்கும் மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை கொண்டு இப்பிரதேச மக்களின் அபிவிருத்தி, அபிலாஷைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X