2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் அமைச்சர் விமல வீர திஸாநாயக்க ஒரு நல்ல மனிதர் : உதுமாலெப்பை

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாண இன ஒற்றுமைக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் விமல வீர திஸாநாயக்க மாகாண அமைச்சுப் பதவிக்கு சோரம் போகாமல் இறுதி வரை தனது கொள்கையுடன் செயல்பட்ட ஒரு நல்ல மனிதர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகவிருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி அவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாழ்த்து செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபைய உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் 21 பேர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இதில்  08 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை கிழக்கு மாகாண சபைக்கு பெரும் கௌரவமாகும்.
 
விசேடமாக கிழக்கு மாகாண கல்வி, காணி, அமைச்சராக பதவி வகித்த விமலவீர திஸாநாயக்க பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் கடந்த 3 தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண கல்வித் துறையை கட்டி எழுப்பியதுடன் காணிப்பிரச்சினைகளுக்கு தன்னால் முடிந்தளவு உதவியதுடன் கிழக்கு மாகாண இன ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ள விமல வீர திஸாநாயக்கவை கிழக்கு மாகாண மக்கள் என்றும் மறந்து விட முடியாதுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.ஐ.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, தயா கமகே, இம்ரான் மௌரூப், எம்.ஐ.அமீர் அலி, எம்.எஸ்.மஃறூப் மற்றும் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண மக்களின் நலன்களில் பணி புரிய நாம் வாழ்த்துகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .