2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்ததுடன், இரு நபர்கள் படுகாயமடைந்த நிலையில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மரணமடைந்தவர் நற்பட்டிமுனை கிராமத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதான முஹம்மது நாபி முஹம்மது அர்ஷ்த் ஆவார்.

மரணமடைந்தவர் தனது தந்தையுடன் வெலிகந்தை பிரதேசத்திலிருந்து நெல் அறுவடை தொழிலை முடித்து விட்டு வீடு திரும்புகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்துடன் இணைத்து இழுத்து வரப்பட்ட நெல் அறுவடை இயந்திரத்துக்குள் இருந்த வாலிபரே மரணமடைந்திருப்பதாகவும், உழவு இயந்திரத்தை ஓட்டி வந்தவர் இவரின் தந்தை எனவும் கல்முனை பொலிஸ் மோட்டார் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.
 
 

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--