2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட இளைஞர் விருது விழா

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எம்.சி.அன்சார்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் விருது வழங்கும் விழா இன்று அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எல்.ஜீ. நந்தலதா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் அரச உடமைகள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் பீ.தயாரட்ன பிரதம அதிதியாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா விசேட அதிதியாகவும் அப்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மூவினங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பாடல், கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, கிராமிய நடனம், கிராமியப் பாடல்கள் மற்றும் புதிய ஆக்கங்கள் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டிய 174 வீரர்களுக்கு சான்றிதழ்களும் முதலிடத்தினைப் பெற்ற 54 வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன்.

அத்துடன் முதலிடத்தினைப் பெற்ற கலை கலாசார நிகழ்சிகள் மேடையில் அரங்கேரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

alt

alt

alt

.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X