2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

அம்பாறையில் போக்குவரத்து பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து இன்று புதன்கிழமை துண்டிக்கப்பட்டுள்துடன், வெள்ளத்தினால் மக்கள் இடம்பெயரும் நிலை அதிகரித்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாற் தெரிவித்தார்.


மாவட்டத்தில் பல வீதிகளை ஊடறுத்து வெள்ளம் 4 அடி உயரத்திற்கு பாய்கிறது.  கல்முனைக்கும்  அம்பாறைக்கும் இடையிலான ; சம்மாந்துறை மாவடிப்பள்ளிதாம்போதியின் மேலாக வெள்ளம் பாய்வதனாலும்   அக்கரைப்பற்றுக்கும் சாகமத்திற்கும்  இடையிலான  கபுர்கடையடி வீதியின் மேலாக வெள்ளம் பாய்வதனாலும் நாவிதன்வெளிக்கும் சம்மாந்துறைக்கும்  இடையிலான் வீரமுனை தாம்போதியின் மேலாக வெள்ளம் பாய்வதனாலும் கல்முனைக்கும்  நாவிதன்வெளிக்கும் இடையிலான கிட்டங்கி தாம்போதியின் மேலாக வெள்ளம் பாய்வதனாலும்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது


இதேவேளை மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன,; அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையேற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .