2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கல்முனை மாநகர எல்லைக்குள் ஒரு கோடி ரூபா பெறுதியான மடுவம் கட்டப்படவுள்ளது

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாடு அறுத்தலுக்கான மடுவம் சாய்ந்தமருது மேற்கு கரைவாகு வட்டைக்குள் அபியா குறூப் ஒப் கம்பனியின் காணியில் கட்டப்படவுள்ளது.

கட்டப்படவுள்ள மடுவத்தை குறித்த தனியார் கம்பனியே பராமரிப்பதுடன் மாநகர சபைக்கு மாதாந்தம் 5,000 ரூபாவை வாடகையாக செலுத்துவது என கல்முனை மாநகரசபையுடன் குறித்த தனியார் கம்பனி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி ஒரு கோடி ரூபா பெறுமதியான புதிய மடுவம் அபியா குறூப் ஒப் கம்பனியhல் நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் கல்முனை மாநகர சபை மேயர் மசூர் மௌலானாவும் அபியா குறூப் ஒப் கம்பனியின் பணிப்பாளர் எம்.அஷ்ரப்பும் நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டனர்.

இந்நிகழ்வில் பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் கல்முனை மாநகர பதில் ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட மாநகர சபை பிரதம பொறியிளாலர் ஏ.ஜே.எச்.ஜவ்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பட்டிமுனை மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளிலுள்ள 40 மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களுக்காக ஒரு நளைக்கு 100க்கு மேற்பட்ட மாடுகள் அறுக்கப்படுகின்றன.

எனினும்இ கடந்த பல வருடங்களாக கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாடு அறுத்தலுக்கான மடுவம் இல்லாமை பாரிய பிரச்சினையாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .