2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

'திரிய பியச' வீடு கையளிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் முதலாம் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 'திரிய பியச' வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இதன்போது நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு  திறந்துவைக்கப்பட்டு; அதன் திறப்பு வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் என்.நேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவும்; கௌரவ அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசனும்; அதிதிகளாக சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .