2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுடைய மீள்ளெழுச்சித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேசத்தின் விநாயகபுரத்திலும்  ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பனங்காடு பிரதேசத்திலும் இதற்கான நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில்  அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி மாகாணப் பணிப்பாளர்

மல்கும்புர, திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ராஜரத்தினம், ஆலையடிவேம்பு கிராமோதய சபைத் தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .