2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை மாவட்டம் 6 ஆம் கொலனி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு நாடாளுமன்ற உப்பினர் பி.எச். பியசேன தனது சொந்த நிதியிலிருந்து சுமார் 1 லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கினார்.

தேசத்திக்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு மத ஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், சுமார் 3.8 மில்லியன் ரூபாய் செலவில் நாவிதன்வெளி பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை 6 ஆம் கொலனி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, மேற்படி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன வழங்கி வைத்தார்.

6 ஆம் கொலனி ஸ்ரீமுருகன் ஆலய அபிவிருத்திக் குழு தலைவர் த.தவப்புதல்வன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.ஜெயாகர்,  ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .