2026 பெப்ரவரி 26, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: 256 ஓட்டங்களைக் குவித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் நடைபெற்று வரும் சிம்பாப்வேக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 256 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் 55 (30), ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 50 (23), திலக் வர்மாவின் ஆட்டமிழக்காத 44 (16), இஷன் கிஷனின் 38 (24), அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் 33 (13), சஞ்சு சாம்சனின் 24 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் பிரயன் பென்னிட் 2-0-16-0, அணித்தலைவர் சிகண்டர் ராசா 3-0-29-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .