2020 நவம்பர் 28, சனிக்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி  காரணமாக காட்டு யானைகள் கிராமங்களுக்குள்  நுளைய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனை, 6ஆம் கிராமம் போன்ற பிரதேசங்களில் இரவு வேளைகளில் வரும் யானைகள் அப்பிரதேசத்தில்  பயிர்வகைகளை நாசமாக்குவதாக  மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யானைகள் பகல் வேளையில் கூட்டமாக ஊடுருவ ஆரம்பித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை(16) ஆறு யானைகள் அப்பிரதேசத்திற்குள் நுளைய முற்பட்ட வேளை மக்கள் விழிப்படைந்து தீவைத்தும், பட்டாசு கொழுத்தியும், கூக்குரலிட்டும் யானைகளை விரட்டினர். எனினும் யானைகள் வயல் வெளிகளிலுள்ள புதர்களில் மறைந்திருந்து மக்களை துரத்த முற்பட்டன.

காட்டு  யானைகளின் வருகை காரணமாக அப்பிரதேச மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் மற்றும் வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றிற்கு அறிவித்துள்ளதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சுதர்சன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--