2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

விசேட தேவையுடையோருக்கு சக்கர கதிரைகள் வழங்கிவைப்பு

George   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால், வலுவிழந்த மற்றும் விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு வீடமைப்பதற்கான காசோலைகள் மற்றும் சக்கர கதிரைகள் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(14) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

விசேட தேவையுடையவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 250,000  ரூபாவுக்கான காசோலை மற்றும் சக்கர கதிரைகள் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் கிராம உத்தயோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எல்.சமட், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எம்.ஹசன், எம்.எம்.முர்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .