2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பழக்கன்றுகள் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்த்துல்லா


பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய திட்டத்திற்கமைய அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்கான பழக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகள் சனிக்கிழமை18) விநியோகிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தெரிவித்தார்.

இதனையொட்டி, வாழ்வின் எழுச்சி 6ஆம் கட்ட வேலைத்திட்டம்  திங்கட்கிழமை(20) காலை சுபNவைளை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் பிரதான நிகழ்வு ஒலுவில் 02ஆம் பிரிவில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மனைப்  பொருளாதாரம் மற்றும் போஷாக்கை மேம்படுத்தும் தேசிய திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள, 503 கிராம சேவகர்கள் பிரிவுகளில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X