2020 மே 25, திங்கட்கிழமை

பெண்களை விடுங்கள்!

Editorial   / 2019 மே 02 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, ஐரோப்பிய மய்யவாதச் சிந்தனையின் நோய்க்கூறுகளில் ஒன்றான ஹிஜாப், ஹபாயா, புர்கா அணிகின்ற முஸ்லிம் பெண்கள் மீது, உடல், வாய்மொழி ரீதியாகத் தாக்குதல் நடத்தும் தன்மை தொடங்கியுள்ளது. இதற்கு உதாரணமாக, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் படங்கள், மீம்ஸ்களால் முஸ்லிம் பெண்களின் நிலை மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றமையை உணர்த்துகின்றன.   

அவசரகாலச் சட்டத்தின் கீழ், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதையும் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான், யுத்தங்களின் ஆயுதமாகவும் இருக்கின்றீர்கள். இன்று, புர்காவைக் கழற்றுமாறும் நீங்களே கூறுகின்றீர்கள். ஆனால், பெண்களாகிய எங்களது உடலில் உங்களுடைய பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஏன் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றீர்கள்?   

பாத்திமா மாஜிதா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X