Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்” - கொள்ளைநோய் பரவிவரும் இக்காலத்தில் நாம் அடிக்கடி கேட்கும் பொதுவான அறிவுறுத்தல் இதுவாகும். ஆனால், கவலைக்கிடமாக, வீட்டில் இருப்பது எல்லாருக்கும் பாதுகாப்பானதாக அமைவதில்லை.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், குடும்பத்தில் நடக்கும் வன்முறை பெருமளவு அதிகரித்திருப்பதாக, நம் நாட்டின் தேசிய செய்தித்தாள்கள் இரண்டில் அண்மையில் வெளியான கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில், தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர், இதைப்பற்றி தெரிவிக்கையில், “மார்ச் 21 முதல், வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 160 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்” என்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இது இலங்கையில் மட்டுமே காணப்படும் சூழ்நிலையாக அமைவதில்லை. புதிய கணிப்பீட்டின் அடிப்படையில், “ஆறு மாதம் வீடுகளில் முடக்கப்பட்டால் பால் ரீதியான வன்முறைகள் 31 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கலாம்” என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதிக்கான அமைப்பு (UNFPA), முன்னறிவிப்பு செய்துள்ளது.
இந்தப் பிரச்சினை எந்தளவு பரவலாக காணப்படுகின்றது என, புள்ளிவிவரங்கள் காட்டினாலும் பாதிக்கப்படும் ஒவ்வொரு நபரின் உணர்ச்சி, உடல் ரீதியான வலியை, அதனால் விவரிக்க முடியாது. நீங்களும் வீட்டில் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் ஒருவரா? அல்லது அப்படிப்பட்ட யாரையாவது உங்களுக்கு தெரியுமா? அப்படியானால், JW.ORGன் இல்லப்பக்கத்தில் சமீபத்தில் வெளியான பின்வரும் சில குறிப்புகளைக் கவனியுங்கள்.
வீட்டில் துஷ்பிரயோகம் செய்யப்படுவோருக்கு உதவி
வீட்டில் துஷ்பிரயோகம் செய்யப்படுவது உங்கள் தவறு அல்ல. உங்களை துஷ்பிரயோகம் செய்பவரே, தன்னுடைய செயல்களுக்கு முழு பொறுப்பாளி. துஷ்பிரயோகம் செய்வதற்கான பழியை, உங்கள் துணை உங்கள் மேல் சுமத்தினாலும், தவறு செய்தவர் அவர்தான். மனைவிகள் அன்பு காட்டப்பட வேண்டியவர்கள், துஷ்பிரயோகம் செய்யப்பட வேண்டியவர்கள் அல்ல.
நீங்கள் பாதுப்பாக உணராத போது அல்லது என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ள போது, மற்றவர்களால் உங்களுக்கு உதவ முடியும். நம்பகமான நண்பரால் அல்லது குடும்ப உறவினரால் உங்களுக்கு நடைமுறையான உதவி அளிக்க முடியும். வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கான அவசர உதவி தொலைபேசி எண்கள் மூலம் உடனடியாக உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தொலைபேசி சேவையை வழங்குபவர்கள், உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை சொல்லித்தரலாம்.
மனிதனுக்கு, உடல் ரீதியான பராமரிப்பு எந்தளவு முக்கியமோ, அதே போலவே, ஆறுதலைப் பெறுவதற்கு ஆன்மீக ரீதியான உதவியும் அவசியம். எனவே, இப் பிரச்சினையை தைரியமாக முகங்கொள்வதற்கு தேவையான உற்சாகத்தை பரிசுத்த வேத எழுத்துகளில் வாசியுங்கள். அப்படிப்பட்ட ஒரு குறிப்பு இதோ, “ உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே கடவுள் இருக்கிறார்; மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உங்களால் எப்படி உதவ முடியும்?
மேலதிக தகவல்களுக்காக, JW.ORGயிலிருந்து எடுக்கப்பட்ட இந்த தகவலை மீள் வெளியீடு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் பேச்சாளரான சந்தன பெரேராவை தொடர்பு கொள்ளுங்கள். அலைபேசி இலக்கம் 077 238 5577, மின்னஞ்சல் முகவரி PublicInformationDesk.LK@jw.org
20 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
2 hours ago