2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

விண்வெளி வீராங்கனையுடன் நடிகை பாவனா

Editorial   / 2026 ஜனவரி 25 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கேரளத்தில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் நடிகை பாவனாவும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

இது குறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாவனா, “உத்வேகமளிக்கக்கூடிய சாதனையாளர்களுடன் மேடையில் ஒருங்கே இருக்கும் பாக்கியம் எமக்குக் கிடைத்தததற்கு நன்றி என்றும் இது தமது வாழ்நாள் மாற்றத்திற்கானதொரு தருணம்” என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரராவார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர்27-ஆம் திகதி முதல் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.

கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்க சுனிதா வில்லியம்ஸ் மட்டுமில்லாது நோபல், புக்கர் பரிசு வென்றவர்கள் உள்பட சர்வதேச அளவில் சுமார் 500 பேச்சாளர்கள் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X