Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, தமிழக காங்கிரசுக்கும் - திமுகவுக்கும் இடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மனக்கசப்புள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்துதான் சோனியாகாந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது என கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் அழகிரி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் விளக்கினார் என கூறப்படுகிறது.
தமிழக அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025