2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதைக் கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

2020ஆண்டுக்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

நேற்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதில் ஒரு இலட்சம் ரூபாய் பணமும்   சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

கடந்த 2019ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஏசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .