Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோயம்பேடு சந்தையில் வெங்காயம் அதிகரிப்பு காரணமாக அதன் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.
ஆந்திரா வெங்காயம் வருகை காரணமாக, அந்த சந்தையில் வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியது. கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டு வந்தது.
தற்போது வெங்காயத்தின் வரவு அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்துள்ளது.
திருவல்லிக்கேணி ஜாம்பஜார், பெரம்பூர் சந்தைகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்டு வருகிறது.
வெங்காய விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது “கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 70 லோடு வெங்காயம் வரும்.
கடந்த இரு மாதங்களாக 30 லோடாக குறைந்திருந்தது. தற்போது 55 லோடுகளுக்கு மேல் வருகிறது. வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது.
அடுத்து வரும் வாரங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.
23 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
1 hours ago