Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 13 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைய முடியும் என்ற தீர்ப்பை, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த வருடம் அளித்தது.
இதனையடுத்து இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. தீர்ப்புக்கு ஆதரவாக பல பெண்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றனர்.
அவர்கள் கடுமையான எதிர்ப்பின் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக கேரள அரசு அறிவித்தது. பல இடங்களில் கலவரங்களும் நடைபெற்றன.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கெனவே இதுதொடர்பாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பில் மறு ஆய்வு கோரும் மனுக்களின் மீதும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அறிவிக்கிறது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025