Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
புது தில்லி:
ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஜம்முகாஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கை தற்போது விசாரித்து வரும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்புடையதுதானா? என்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு மாற்றுவது குறித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று
பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.
மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனி நபா்கள், வழக்குரைஞா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் சார்பில் பல்வேறு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது. அந்த அமா்வில், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனா்.
இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மார்ச் 2ஆம் திகதிக்கு கடந்த ஜனவரி 23ஆம் திகதி ஒத்திவைத்தது.
அதன்படி அந்த மனுக்கள் மீது இன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ஜம்முகாஷ்மீா் நிர்வாகம் சார்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷார மேத்தா ஆகியோர்ஆஜராகினா். மனுதாரா்கள் சார்பில் மூத்த வழக்குறைஞர் ராஜீவ் தவான் உள்ளிட்டோர் ஆஜராகினா்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கையை கடந்த நவம்பா் மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
01 Jan 2026