2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

டெல்லி வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் வடகிழக்கு டெல்லி யில்  மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில்  

பலியானோரின் எண்ணிக்கை 45 ஆக இருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக

உயரந்துள்ளது. இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது.

வன்முறை காரணமாக  903 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது

கூடுதலாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த 4 நாள்களில் வன்முறை தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு எந்த அழைப்புகளும் வரவில்லை

என்றும், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது பொலிஸாரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .