2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தங்கம் விலை மீண்டும் உயர்வு

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல்,

இந்தியாவில் தொழில்துறை தேக்கம் போன்ற காரணங்களால் கடந்த 3 மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இருப்பினும் பின்னர் சற்று நிலைமை சீரடைந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் சுழற்சியும் தேக்கமடைந்துள்ளது.

இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம்

திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து

வருகின்றன. பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது கிராம் 4 ஆயிரம்

ரூபாய்க்கும் அதிகமாகவும், பவுண் 32 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை அன்று தங்கம் விலை குறைந்தது

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை ஒப்பிடுகையில் 12 ரூபாய்

உயர்ந்து ரூ. 3998 க்கு விற்கப்படுகிறது. பவுணுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.31984க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் ரூ. 33576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.10 உயர்ந்து ரூ.48.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .