2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

தமிழக அரசின் ஆய்வுகளில் ’காற்று மாசு’ என முடிவு

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசு குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்றுக் காலை ஆலோசனை நடத்தினார்.

  சென்னையில் கடந்த ஒருவாரமாக படர்ந்திருப்பது பனியா? அல்லது காற்று மாசா என்பது குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வந்துள்ளன. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது காற்று மாசுதான் என்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு செய்தியாளர்களிடம்  அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்ககையில் :

அந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை புல் புல் புயலாக மாறியது. கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்ட காரணத்தால் இதுபோன்ற காற்றழுத்தத் தாழ்வு நிலை தாழ்வான நிலைக்கு வரும் போது சூரிய ஒளி முழுமையாக உள்ளே வர வாய்ப்பு இருக்காது.

அதே சமயம், கடற்காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். தரைப் பகுதிக்கு வரும் கடற்காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும்.

மேற்கண்ட காரணங்களால் இந்த ஒரு வார காலத்தில் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது. சென்னையில் 8 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்  மாசு கட்டுப்பாட்டுத் தர ஆய்வு மய்யம் உள்ளது.  இதில் சென்னை காற்றின் தரத்தின் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதே சமயம், வாகனப் புகை, தொழிற்சாலைகளின் புகை காரணமாகவும் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

மேலும் அவர்  பேசுகையில், சென்னையில் ஏற்பட்டி ருக்கும் காற்று மாசு காரணமாக, பொதுமக்கள் யாருக்காவது சுவாசக் கோளாறு ஏற்பட்டிருக்கிறதா என்றால், அதுபோன்ற நிகழ்வு எதுவும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

காற்று மாசினால் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக மருத்துவமனையில் யாரும் சிகிச்சைப் பெறவில்லை என்பதும், அதே சமயம், காற்று மாசினால் சளி தொந்தரவு, ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்களில், பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.அதேபோல, சென்னையில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசு, வட இந்தியாவில் இருந்து வரவில்லை.. சமூக வலைத்தளங்களில் அதுபோன்று கூறப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .