2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நேரில் வாழ்த்து தெரிவித்த தி.மு.க., எம்.பிக்கள்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

01.புதுடில்லி

ஸ்டாலினின் மகன் உதயநிதியின் பிறந்தநாளுக்காக, தி.மு.க., எம்.பிக்கள்  நேரில் சென்று  வாழ்த்துச் சொல்ல சென்றனர்.

அரசியல் சாசனத்தின், 70வது ஆண்டையொட்டி,  நாடாளுமன்றக்  கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.

மஹாராஷ்டிரா அரசியல் சூழ்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.

மஹாராஷ்டிராவில், பா.ஜ., ஆட்சி அமைத்த விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், சிவசேனா, திருணமுல் காங்கிரஸ்., தி.மு.க.  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற  வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்ட தி.மு.க., எம்.பி.,க்கள் பலர், மதியத்துக்கு மேல், நாடாளுமன்றத்துக்கு வராமல், விமானநிலையத்திற்கு பறந்தனர்.

விசாரித்தபோது, ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி தலைவருமான உதயநிதியின் பிறந்தநாளுக்காக, அவருக்கு நேரில் வாழ்த்துச் சொல்லக் கிளம்பியது தெரிய வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .