2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

“போகாதே... போகாதே”, “வெறுப்பை கைவிடுங்கள்”

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை இது குறித்து 

அறிவிப் பதாகவும் பிரதமர் மோதி    திங்கட்கிழமை ட்வீட் செய்து இருந்தார். இதனையடுத்து இந்திய அளவில் Nosir என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

சமூக ஊடகங்களில் மோதியின் ஆதரவாளர்கள் "போகாதே... போகாதே..." என நெஞ்சுருகி ட்வீட் செய்து வருகிறார்கள். உங்களால்தான், உங்களுக்காகத்தான் சமூக

ஊடகங்களில் கணக்கைத் தொடங்கினேன். நீங்கள் அதிலிருந்து வெளியேறினால், நானும் வெளியேறியதைத் தவிர வேறு வழியில் என பேரன்பால் மோதியை

திக்குமுக்காடச் செய்து வருகின்றனர். அதேநேரம், மோதியின் அறிவிப்புக்கு எதிர்வினையாற்றியுள்ள ராகுல் காந்தி, "வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடக கணக்கை அல்ல," என்று ட்வீட் செய்துள்ளார்.

Nosir என்ற ஹேஷ்டாகுகளின் கீழ் மட்டும் 54 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .