2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை கூடுகிறது

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு,


2020ஆம் ஆண்டில் கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த மாதம் 17 ஆம் திகதி தொடங்கி 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் வஜூபாய் வாலா, கூட்டு

கூட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி உரையாற்றி இருந்தார். பின்னர் கவர்னர் உரையின் மீது கடந்த 18 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை விவாதம் நடைபெற்றது.

ஆனால், மங்களூரு கலவரம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளால் கவர்னர் உரையின் மீது முதலமைச்சர் எடியூரப்பாவால் விளக்கம் அளிக்க முடியாமல் போனது.

இதையடுத்து, கூடுதலாக ஒரு நாள் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரியிடம் வலியுறுத்தின.

இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்து விட்டார். மாறாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக கவர்னர் உரைக்கு முதலமைச்சர்  எடியூரப்பா விளக்கம்

அளிப்பார் என்றும், இதற்காக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 2- ஆம் திகதியில்

(அதாவது நாளை) இருந்து 31 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தெரிவித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X