Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லி
டெல்லி மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்று நினைத்த பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே ரஜினியால் கிடைத்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
அதில் ரஜினி, குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.
நேற்றுமன்தினம் முதற் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
நேற்றுக் காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ரஜினி,டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவிப்பார் என்று பத்திரிகையாளர்கள் சென்னை விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். தமிழக ஊடகங்கள் மட்டுமன்றி ஆங்கில ஊடகங்களும் வந்திருந்தன.
ஆனால், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினி, பத்திரிகையாளர்கள் மைக்குடன் இருந்த இடத்துக்கு நேராக வந்தார்.
"அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துவிட்டு உடனடியாகச் சென்றுவிட்டார்.
அங்கிருந்தால் தானே கேள்வி எழுப்புவீர்கள் என்று அவர் அவசர அவசரமாக நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
42 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
1 hours ago
3 hours ago