2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினியின் மனு தள்ளுபடி!

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளிக்காததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா.. இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து தங்களை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய நளினி அளித்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .