2020 மே 28, வியாழக்கிழமை

அர்னாப்பை கைது செய்ய தடை நீட்டிப்பு

Editorial   / 2020 மே 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் செய்தி தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக, நாட்டின் பல்வேறு இடங்களில் தொடரப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க விதித்துள்ள தடையை, உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற, அர்னாப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மஹாராஷ்ராவின் பால்கரில், இரண்டு சாதுக்கள் உட்பட மூன்று பேர், அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி அலைவரிசையில் நடந்த விவாதத்தின்போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கருத்து கூறியதாக, அந்த அலைவரிசையின் ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X