2020 மார்ச் 30, திங்கட்கிழமை

உதாசீனித்தவர் பதவி இழப்பர்

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.கொவிட்-19 பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 

இதுவரை கொவிட்-19க்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்து ள்ளனர்.

இதையடுத்து கொவிட்-19 பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று   நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், "அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து ஊர்களில் மக்கள் அனைவருக்கும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உயிர் காக்க 21 நாள்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணி சேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்".இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .