2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஜெயலலிதாவின் கனவை தினகரன் நிறைவேற்றுவாரா?

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம் ;

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று சசிகலாகோரிக்கை வைத்துள்ளார், அது அதிமுகவின் வெற்றி ஆகும். அதே கனவை நிறைவேற்ற தினகரனும் முன் வரவேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வேண்டுகோள் வைத்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாவது:

“ஜெயலலிதாவின் கனவு ஒன்றுபட்ட அதிமுக, உறுதியான அதிமுக. ஆனால், நமது அரசியல் எதிர்ப்பாளர்கள் அதிமுகவை பிளவுப்படுத்தி அதன் மூலம் தாங்கள் அதிகாரத்துக்கு வர முயல்கின்றனர். சசிகலா ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார் அதை வரவேற்கிறோம்.

ஜெயலலிதாவின் கனவு என்ன ஒன்றுபட்ட அதிமுக, முன்னேறிய தமிழகம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான என்டிஏ அணி ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றி வருகிறோம். தினகரன் அதிமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புண்டு.

ஆனால் தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். நேற்று நீங்கள் அனைவரும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டீர்கள் இன்று என்ன நடந்துள்ளது. நாங்கள் சசிகலாவை விலக நிர்பந்திக்கவில்லை. அனைத்தும் வதந்தி என்பது உண்மையாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .