2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

‘நடிகர் விஜயுடன் எந்த பகையும் இல்லை’

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

''தனிப்பட்ட முறையில், நடிகர் விஜயுடன் எந்த பகையும் இல்லை,'' என்று இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று  பொன் ராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில், “வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அவர்கள் நடிகர் விஜய்யிடம் விசாரிக்கின்றனர். அவர்கள் கடமையை செய்கின்றனர். தனிப்பட்ட முறையில், விஜய்க்கும், எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியை, நடிகர் விஜய் கோவையில்தான் சந்தித்தார்.

நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பு குறிப்பிட்ட இடத்தில் நடத்தக்கூடாது என்றுதான், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் நடிக்கிறார் என்பதற்காக எதிர்க்கவில்லை. என்.எல்.சி., நிறுவனம் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது தவறு. தனிப்பட்ட நடிகர் விஜயை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--