Editorial / 2020 ஜனவரி 15 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
நிர்பயா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22 ஆம் திகதி தூக்கிடுவதற்கு
டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 குற்றவாளிகளில்
ஒருவரான முகேஷ் குமார் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். தூக்குத் தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல்
செய்திருந்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருப்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 பேரில் சிறை விதிகளை மீறியதாக, வினய் 11 முறையும் முகேஷ் 3 முறையும் பவன் 8 முறையும் அக்ஷய் ஒரு தடவையும் தண்டிக்கப்பட்டதாகவும் திஹார் அதிகாரிகள்
தெரிவித்தனர். இந்த குற்றவாளிகளில் 3 பேர் சேர்ந்து சிறையில் வேலை பார்த்ததில் ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கருணை மனு நிலுவையில் இருப்பதால் ஜனவரி 22 ஆம் திகதி நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு மேல்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025