A.K.M. Ramzy / 2021 ஜனவரி 13 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
பொங்கல் பண்டிகையை இந்துக்கள் நாளை 14ஆம் திகதி கொண்டாடுகின்றனர். அதேவேளை,நாளை மறுநாள் (15 ஆம் திகதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஜோதிடர் பி.வி.ரமணி அய்யர் அளித்துள்ள நேரம் வருமாறு:-
நாளை (14 ஆம் திகதி) காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்.
15 ஆம் திகதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும்.
ஹரித்துவார மங்கலம் ஜோதிடம் ஆர்.ராஜாராம அய்யர் கணித்துள்ள விவரம் வருமாறு:-
நாளை (14 ஆம் திகதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அடுப்புகள் கட்டி காலை 11.05 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பகல் 1.30 மணிக்குள் பூஜை நிவேதனம் செய்து போஜனம் செய்ய உகந்தமான நேரம் ஆகும்.
15 ஆம் திகதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்குள் மாட்டுத்தொட்டி கட்டி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் மாடுகளை குளிப் பாட்டி மாலை 4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகள் விட உத்தமமான நேரம் ஆகும்.இவ்வாறு அவர்கள் கணித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago
8 hours ago