2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரின் குடும்பத்துடன் முதல்வர் பொங்கல் கொண்டாட்டம்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 14 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை;

சென்னையில் பொலிஸாரின்  குடும்பங்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பொங்கல் பண்டிகையை நேற்றுக் கொண்டாடினார்.

சென்னை பொலிஸ் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் தைப்பொங்கல் விழாவை முதல்வர் பழனிசாமி ஆரம்பித்து வைத்தார்.

பரங்கிமலையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற  தைப்பொங்கல் விழாவில் பொலிஸ் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முதல்வர், கயிறு இழுக்கும் போட்டி யையும், பாரம்பரிய மிக்க நடன நிகழ்ச்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

பொங்கல் விழாவில் பொலிஸ் அதிகாரிகள், சென்னை பெருநகர பொலிஸ்  ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .