2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் ’டோர்ச் லைட்’ சின்னம்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ' டோர்ச் லைட் '  சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்தநாளன்று இது நிகழ்ந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு ' டோர்ச் லைட் ' சின்னம் ஒதுக்கப் பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு பேட்டரி ' டோர்ச் லைட் ' சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .