Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
பிரதமர் மோடியின் ஆட்சியில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் அச்சப்படக் கூடாது. குடியுரிமைத் திருத்த மசோதா அண்டை நாடுகளிலிருந்து அடைக்கலம் வந்திருக்கும் சிறுபான்மை மக்களுக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைத் தரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் அறிமு கம் செய்யப்பட்டது. ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் நேற்றுமுன்தினம் நள்ளிரவு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா முஸ்லிம் மக்களுக்கு எதிரானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். இதனால், மக்களவையில் நேற்றுமுன்தினம் காரசாரமான விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அப்போது அவர் தொடர்ந்தும் பேசியதாவது:
நிச்சயமாக மோடி அரசு தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நடைமுறைப்படுத்தும்.
அவ்வாறு நாடுமுழுவதும் குடியுரிமைப் பதிவேடு நடைமுறைப் படுத்தப்பட்டால், நாட்டில் சட்டவிரோதமாக ஒருவர் கூட தங்கி இருக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கும், மூன்று அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இங்கு வந்து மதரீதியான விசாரணையை எதிர்கொண்டு வரும் மக்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.
பிரதமர் மோடியின் ஆட்சியில் யாரும் துன்பப்ப டக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்.
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்பட வில்லை என்றால் குடியுரிமைத் திருத்த மசோதா தேவையில்லை.
ஆனால், கடந்த 1951-ம் ஆண்டில் இந்தியாவில் 9.8 சதவீதம் இருந்த முஸ்லிம் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆனால், இந்து மக்கள் தொகை கடந்த 1951-ம் ஆண்டில் 84சதவீதம் இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு 79 சதவீதமாகக் குறைந்துள்ளது
ஆனால், பாகிஸ்தானில் கடந்த 1947-ம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த சிறுபான்மை மக்கள் தொகை 2011-ம் ஆண்டில் 3.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வங்கதேசத்தில் 1947-ம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த சிறுபான்மை மக்கள் தொகை 2011-ம் ஆண்டில் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆனால், இந்தியா ஒருபோதும் மதரீதியாக மக்களை வேறுபாடு காட்டவில்லையே என அமித் ஷா தெரிவித்தார்.
23 minute ago
24 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
28 minute ago
35 minute ago