2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

விவசாயிகளுடன் நாளை சந்திப்பு

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வேளாண்மைச் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினர், நாளை (21) முதல் தடவையாக விவசாயிகளைச் சந்திக்கவுள்ளனர்.

மத்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியின் எல்லைப் பகுதியில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசாங்கம், விவசாயிகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும், உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வேளாண்மைச் சட்டங்களுக்கும், இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன், இந்தச் சட்டங்களை ஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டதுடன், இடைக்கால தடையுத்தரவை வரவேற்ற விவசாயிகள், ஆய்வுக்குழவை நிராகரிப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து, 4 உறுப்பினர்களில் ஒருவர், குழுவில் இருந்து விலகியதோடு, மிகுதியாக உள்ள மூவரும், நாளை (21) விவசாயிகளைச் சந்திக்கவுள்ளனர்.

இந்நிலையில், தங்களை நேரில் சந்திக்க விரும்பும் விவசாய அமைப்புகளுடன், ஆலோசனை நடத்தப்படும் என்றும் நேரில் சந்திக்க முடியாதவர்களுடன், காணொளி மூலம், ஆலோசனை பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .