2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (09.10.2011)

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (09.10.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 22ஆம் நாள் (09.10.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த யோகமும் திரயோதசி திதியும் சதயம் நட்சத்திரம் மாலை 12.54 மணிவரை, பின்பு பூரட்டாதி.
இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணிவரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
வளர்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 6.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.



மேடம்
வியாபார முயற்சிகள் அலைச்சலை ஏற்படுத்தும், துஷ்டர்களின் நட்புக்கள் கஷ்டத்தை தரும், சில உடல் சோர்வுகள் ஏற்படும்.
அஸ்வினி: சிக்கல்
பரணி: மனம் தளர்வு
கிருத்திகை 1ஆம் பாதம்: கவலை


இடபம்
கடின உழைப்பினால் அதிக லாபம், சிறு மன பதற்றங்கள் தோன்றி மறையும், பகைவர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
கிருத்திகை 2, 3, 4: உயர்வு
ரோகிணி: அனுகூலம்
மிருகசீரிடம் 1, 2: சஞ்சலம்


மிதுனம்
சிக்கனமற்ற செலவுகளை மேற்கொள்ளல், நவீன வேலைத் திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், திருடர்களினால் மனபயம் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: கலக்கம்


கடகம்
நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: சுபவிசேஷங்கள்
ஆயில்யம்: நட்பு


சிம்மம்
சரும உபாதைகள் வந்து நீங்கும், வியாபாரத்தில் அதிகாரிகளின் போட்டிகளினால் நஷ்டம், அனாவசிய பிரச்சினைகள் தேடி வருதல்.
மகம்: குழப்பம்
பூரம்: சுகயீனம்
உத்திரம் 1ஆம் பாதம்: தோல்வி


கன்னி  
எதிர்பாராத உதவிகள் தேடி வருதல், அயல் தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: களைப்பு
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சலுகை


துலாம்
அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், தீயவர்களின் சகவாசங்களினால் பிரச்சினை, செயல்களில் தவறுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: செலவு
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களின் வருகை, பெண்களின் உதவிகள் கிடைக்கும், நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: ஆரோக்கியம்
கேட்டை: அன்யோன்யம்


தனுசு
தொழிலில் சக உழியர்களுடன் பகை ஏற்படுதல், புதிய வேலைத் திட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்தும், அறிமுகமற்ற நட்புக்களினால் துன்பம்.
மூலம்: தோல்வி
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கவலை


மகரம்
பண விடயங்கள் எதிர்பார்த்தபடி அமையாது, தேவையற்ற பேச்சுவார்த்தைகளினால் பகை, பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: நஷ்டம்
அவிட்டம் 1, 2: நாவடக்கம்


கும்பம்
திருடர்களினால் மனபதற்றம் ஏற்படும், திட்டமிட்ட காரியங்கள் தோல்வியை தரும், கடின வாக்குவாதங்;களுக்கு இடமுண்டு.
அவிட்டம் 3, 4: விவாதம்
சதயம்: சிக்கல்
பூரட்டாதி 1, 2, 3: பயம்


மீனம்
எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும், நவீன தொடர்புகள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: வாய்ப்பு
ரேவதி: பொறுமை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .