2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (18.11.2012)

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (18.11.2012)


மேடம்
உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை தகுந்த ஓய்வும் தேவை. வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அச்சம் கொள்வீர்கள். சக பணியாளர்களால் பணிசுமைக்கு ஆளாக நேரிடும்
அஸ்வினி: கஷ்டம்
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்


இடபம்
போதிய வருமானத்தினால் ஆடம்பர பொருட்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு தலைமைக் பொறுப்புக்கள் கூடிவரும். நவீன உக்திகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: இலாபம்


மிதுனம்
பணவரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களுடன் பொழுதை சுகமாக களிப்பீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்
பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
கடின அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு காணப்படும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வளர்ச்சிக்கான விஷயங்களைத் தள்ளிப்போடுவது நல்லது.
மகம்: கஷ்டம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி
புதிய நண்பர்களின் மூலம் நல்ல நட்புகள்  கிடைக்கும். விருந்து உண்ணும் வாய்ப்புக்கள் தேடி வரும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்புக்கள் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்;லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: இலாபம்


விருட்சிகம்
உடலில் அசௌகர்யம் தென்படலாம். மருத்துவ ஆலோசனை தேவை. பணி சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம்.
விசாகம் 4: பயம்
அனுசம்:  துக்கம்
கேட்டை: துன்பம்


தனுசு
கடின பேச்சுக்களால் மனம் சஞ்சலமடையும். பொறுமையுடன் பேசுவது அவசியம். வாடிக்கையாளர்களின் ஆதரவு குறைவாகவே காணப்படும்.
மூலம்: கஷ்டம்
பூராடம்: துக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்


மகரம்
மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றி


கும்பம்
இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நவீன உக்திகளால் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் வீட்டில் அடிக்கடி நடக்கும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்


மீனம்
வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணியிடத்தில் செல்;வாக்கு கூடும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: இலாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .